Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

உ.பி.யில் லாரி மீது கார் மோதி கோர விபத்து 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் ஓரமாக நின்றிருந்த லாரி மீது நேற்று கார் மோதியது. இந்த கோர விபத்தில் உருக்குலைந்த கார்.படம்: பிடிஐ

லக்னோ

உத்தரபிரதேசத்தில் சாலை யோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

உ.பி.யின் பிரதாப்கர் மாவட்டம் குண்டா பகுதியைச் சேர்ந்த 14 பேர், நவாப் கஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு, அனைவரும் எஸ்யுவி காரில் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இந்நிலையில் பிரயாக்ராஜ் – லக்னோ நெடுஞ்சாலையில் பிரதாப்கர் மாவட்டம், மாணிக்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கடும் வேகத்தில் கார் மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்து, அதில் பயணித்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேரும்அதே இடத்தில் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி உடல்களை வெளியே எடுத்தனர். இதையடுத்து அனைவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 நிதியுதவி அறிவித்த அவர், குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

நள்ளிரவில் கார் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x