Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105-ஐ கடந்தது :

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 20 காசுகள் உயர்ந்து விலை ரூ.105-ஐ கடந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 85 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இவை இரண்டும் ஏற்கெனவே ஒரு லிட்டர் ரூ.100-ஐ கடந்துவிட்டன.

இந்நிலையில், நேற்று பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.105-ஐ கடந்தது. கடந்த 25, 26 தேதிகளில் ஒரு லிட்டருக்கு 8 காசுகள் வரை விலை குறைந்திருந்த நிலையில், 26-ம் தேதி ஒரு லிட்டர் ரூ.104.60-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு 27-ம் தேதி 33 காசுகளும், நேற்று 20 காசுகளும் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.105.13 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று டீசல் விலை நேற்று லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.101.25-க்கு விற்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x