Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் வந்தார். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரியின் மனை வியை நேரில் சந்தித்து அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீரை 2 ஆகப் பிரித்து லடாக் தனி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முதல் முறையாக காஷ்மீர் சென்றார்.
3 நாள் பயணமாக நேற்று காலை நகர் விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அமித் ஷாவை, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டிஜிபி தில்பக் சிங் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நகரின் புறநகரான நவ்காம் பகுதிக்குச் சென்றார். அங்கு தீவிரவாதிகளால் கடந்த ஜூன் 22-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வேஸ் அகமதுவின் மனைவி பாத்திமா அக்தர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், கருணை அடிப்படையில் பர்வேஸ் அகமதுவின் மனைவிக்கு அரசு பணிக்கான நியமன ஆணையையும் அமித் ஷா வழங்கினார்.
அதன்பிறகு நகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். மாலை 4.45 மணிக்கு காஷ்மீர் இளைஞர் கிளப் உறுப்பினர்களைச் சந்தித்து அமித் ஷா உரையாடினார். அதன்பிறகு மாலை 6 மணிக்கு நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு நேரடி சர்வதேச விமான சேவையை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அமித் ஷாவின் வரு கையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT