Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

எந்த விவகாரம் குறித்தும் நேரடியாக என்னோடு கட்சியினர் பேசலாம் - நானே காங்கிரஸின் முழுநேர தலைவர் : காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சோனியா காந்தி, நானே காங்கிரஸின் முழுநேர தலைவர் என்று தெரிவித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றார். கடந்த 2019 மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவி யில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து கட்சியின் இடைக் கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸை வலுப்படுத்த நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதி ராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட் டத்தை நசுக்க மத்திய அரசு முயற்சிக் கிறது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கலவரம் பாஜகவின் மனப்போக்கை வெளிப்படுத்துகிறது.

விலைவாசி உயர்வு

நாட்டின் பொருளாதாரம் மோச மடைந்து வருகிறது. இதுகுறித்து மத் திய அரசிடம் கேள்வி எழுப்பினால் பொருளாதாரம் மீண்டு வருகிறது என்று மழுப்பலாக பதில் அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற் போதைய பாஜக அரசு, பொதுத்துறை நிறுவனங்களையும் நாட்டின் சொத்து களையும் விற்பனை செய்து வருகிறது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் நலிவுற்ற நிலையில் உள்ளனர். பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தை ஏழைகளால் எவ்வாறு சமாளிக்க முடியும்.

பாஜக அல்லாத மாநில அரசு களிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள் கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை களில் மத்திய அரசு திறம்பட செயல் படவில்லை. காஷ்மீரில் சிறுபான்மை யினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அங்கு அமைதி, சமூக நல்லிணக்கத்தைப் பேண மத்திய அரசு தவறிவிட்டது.

சுயகட்டுப்பாடு அவசியம்

மத்திய அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகள் நம்மை விட்டு விலகி செல்கின்றன. எல்லையில் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. நமது எல்லை பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார்.

காங்கிரஸை புதுப்பிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்பு கின்றனர். இந்த நேரத்தில் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சுயகட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் கட்சியின் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா 2-வது அலை காரணமாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிய வில்லை. உள்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செய லாளர் வேணுகோபால் வெளியிடுவார்.

இப்போதைய நிலையில் நானே கட்சியின் முழுநேர தலைவர். எந்த விவகாரம் குறித்தும் ஊடகங்கள் மூலமாக என்னோடு பேச வேண்டாம். நேரடியாக என்னோடு பேசலாம். சுதந்திரமாக, நேர்மையாக. திறந்த மன துடன் ஆலோசிக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

2022-ல் தலைவர் தேர்தல்

காரிய கமிட்டி கூட்டத்தில் ராஜஸ் தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி யின் மூத்த தலைவர் அம்பிகா சோனி ஆகியோர் பேசும்போது, ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறும்போது, "கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நடைபெறும். ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்து கின்றனர். இதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற் பது குறித்து பரிசீலிப்பேன் என்று ராகுல் காந்தி கூறியதாக அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x