Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM

தமிழகத்தில் 3,391 கடைகளில் ஆய்வு - 101 உரக் கடைகள் மீது நடவடிக்கை :

தமிழகம் முழுவதும் 3,391 உரக் கடைகளில் ஆய்வு நடத்தியதில், விதிகளைப் பின்பற்றாத 101 உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தரப் பில் நேற்று வெளியிடப்பட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சாதகமான பருவ மழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. குறிப்பாக, 13.168 லட்சம் ஏக்கரில் நெல் நடவுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால் உரத் தேவை அதிகரித்துள்ளது.

உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இடர் பாடுகளைக் களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இந்த மையத் தைத் தொடர்புகொண்டு, உரம் தொடர்பான புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 8-ம் தேதி தமிழகம் முழுவதும் 3,391 தனியார் உரக் கடைகளில் வேளாண்மைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங் களை விற்பனை செய்தல், விற் பனை முனைய கருவியின் மூலம் பட்டியலிட்டு, உர விற்பனையை மேற்கொள்ளுதல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

உர இருப்பில் வித்தியாசம் காணப்பட்ட 84 கடைகளின் உரிமை யாளர்களிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. மேலும், இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத 16 உரக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உரிய விதிகளைப் பின்பற்றாத 101 உரக் கடைகள் மீது நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. கூடுதலாக இருப்பு வைத் துள்ள உரக்கடை உரிமையாளர் களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உர விற்பனையில் அரசின் வழி காட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் பின்பற்றாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x