Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டம் தொடக்கம் - மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல் வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய முதல் வர், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் முதல்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங் கில் நேற்று நடந்தது. இந்த திட் டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 10 பயனாளி களுக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார். இத் திட்டம் ரூ.3,025 கோடியில் செயல் படுத்தப்பட உள்ளது.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில், 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகளே தரப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் ஒரு லட்சம் இணைப்புகள் தரப் போகிறோம். இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் இல்லை. காவிரி நதிநீர் பங்கீடு போன்ற பெரிய பிரச்சினையாக இருந்தா லும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும் உடனடியாக செவிமடுத்து நிறை வேற்றும் ஆட்சிதான் திமுக ஆட்சி.

ஒரு லட்சம் புதிய இணைப்பு களில் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால், மின்வாரி யம் செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். அதிமுக ஆட்சியாளர்களால் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் மின் வாரி யம் இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண் டிய நிலையில் உள்ளது. மின் வாரியத்தை காப்பாற்றும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. சூரிய மின் சக்தி, புனல் நீரேற்று மின்சக்தி மற்றும் இயந்திர மின் திட்டங்களைத் தொடங்க ஆலோ சனைகள் வழங்கவும், நிதி தேவை யான ரூ.1.32 லட்சம் கோடியை திரட்டவும் மரபுசாரா எரிசக்தி மேம் பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு ள்ளோம். மரபுசாரா எரிசக்தித் துறையில் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை போட்ட ஒரே மாநிலம் தமிழகமாகும்.

மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் மின்துறையை யாரும் குறை சொல்ல முடியாத துறையாக மாற்ற வேண்டும் என அமைச் சருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தர விட்டுள்ளேன். புதிய இணைப்பு பெற்றுள்ளவர்கள், மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத் துங்கள். மின் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய செலவு வைக்கும் திட்டமாக உள்ளதால், முடிந்த அளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, மா.சுப்பிர மணியன், எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை செயலர் தர் மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x