Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் - தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து

தமிழகத்தின் புதிய ஆளுநராக, ஆர்.என்.ரவி நேற்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் வளர்ச்சிக் காக அரசியலமைப்பு வகுத் துள்ள வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன் என்று அப்போது ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, நாகாலாந்து ஆளுநராக இருந்த ரவீந்திர நாரா யண ரவியை தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்.16-ம் தேதி சென்னை வந்தார். அவரை, தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளி்ட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைச்செயலர் வெ.இறை யன்பு உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, நேற்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி யேற்றார்.

இதற்காக, ஆளுநர் மாளிகை யில் உள்ள தர்பார் அரங்கின் அரு கில் உள்ள புல் வெளிப்பகுதியில் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்குக்குள் காலை 9.30 மணி முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வந்து அமரத்தொடங்கினர். காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள், பல்வேறு நாடு களின் தூதரக அதிகாரிகள், முப் படை அதிகாரிகள் வந்தனர். சரியாக காலை 10.25 மணிக்கு புதிய ஆளு நர் ஆர்.என்.ரவியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தலைமைச்செயலர் வெ.இறை யன்பு உள்ளிட்டோர் மேடைக்கு வந் தனர்.

இதையடுத்து, தமிழக ஆளு நராக ஆர்.என்.ரவி நியமிக்கப் பட்டதையும், அதுகுறித்த குடி யரசுத் தலைவரின் அறிவிப்பையும் தலைமைச் செயலர் வெ.இறை யன்பு வாசித்தார். தொடர்ந்து, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, ஆளுநருக்கு முதல் வர் நினைவுப்பரிசாக, சென்னை மாநில வரலாறு மற்றும் கீழடி- தமிழர் நாகரீகம் தொடர்பான புத்த கங்களை வழங்கினார். பின்னர், பேரவைத்தலைவர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர்களை ஒவ் வொருவராக ஆளுநருக்கு அறி முகப்படுத்தி வைத்தார். இதை யடுத்து, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, பதவியேற்பு விழாவில் பங்கேற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை அறிமுகம் செய்தார். இதையடுத்து மேடைக்குச் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித் தார். அவரைத்தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனு சாமி, ஆர்.வைத்திலிங்கம், பி.தன பால், பி.தங்கமணி, எஸ்.பி.வேலு மணி, எம்பி., நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதவிர, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, முன் னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கனிமொழி, கலாநிதி வீராசாமி உள் ளிட்ட திமுக எம்பிக்களும் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, புதிய ஆளுந ருடன் முதல்வர், தலைமைச் செய லர் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி யில், ஆளுநரின் மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் பங்கேற் றனர். இதுதவிர, தமிழக அரசுத் துறை செயலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங் கேற்றனர்.

புறக்கணிப்பு

அதே நேரம், திமுகவின் கூட் டணி கட்சியான காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகி யோருக்கு இருக்கைகள் போடப் பட்டிருந்தன. ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஆளுநர் நியமனம் தொடர்பாக அதிருப்தி தெரிவித் திருந்த நிலையில், பதவியேற்பில் பங்கேற்கவில்லை. அதேநேரம், வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா பங்கேற்றார்.

புதிய ஆளுநராக பொறுப் பேற்றபின் செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறியதாவது:

உலகின் மிக பழமையான இன் றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரம், நாகரீகத்தை, கொண்ட மக்கள் உள்ள இந்த மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் ஆன்மிகம், அரசியல் ஞானம் ஆகியவற்றினால் நம் நாடு பெருமளவில் பயனடைந்துள்ளது. இந்த மாநிலமும், மக்களும் நாட் டின் வளர்ச்சிக்கும், நாட்டை கட்ட மைக்கவும் அதிகளவில் பணி யாற்றியுள்ளனர். நான் தமிழக மக் களுக்கு என் திறமையை பயன் படுத்தி அரசியலமைப்பு எனக்களித் துள்ள வரம்புக்கு உட்பட்டு பணி யாற்ற தயாராக உள்ளேன்.

நாடாளுமன்றம் மற்றும் ஜன நாயகம் செயல்பட முக்கியமானது ஊடகங்களின் பணியாகும். நீங்கள் இந்த மண் மற்றும் மக்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்கிறீர்கள். எனது பெறுப்பை நிறைவேற்ற உங்களின் செய்திகள் மற்றும் அனுபவங்கள் எனக்கு பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நான் முதலில் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். இவ்வாறு கூறினார்.

சிறப்பாக செயல்படுகிறது

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த உங்களது கருத்து என்ன, முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டார். அது போன்ற திட்டம் தங்களுக்கு உள்ளதா?

நான் தற்போது தான் பொறுப் பேற்றுள்ளேன். இருப்பினும் மக் களுக்காக செயல்பட வேண்டியது நல்ல அரசின் கடமையாகும். ஆளு நர் என்பவர் அரசியலமைப்பு சட்ட வரம்புக்குள் தான் செயல்பட முடியும். நான் அதை கருத்தில் கொண்டு முடிந்த அளவில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். இப்போதுதான் நான் வந்துள்ளேன் என்பதால், இப்போதே தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கூற இயலாது. இருப்பினும் சிறப்பாக செயல்படுகிறது என்று நான் நம்புகிறேன்.

காவல்துறை அதிகாரியாக உங்களின் அனுபவங்கள் இப் பணிக்கு உதவுமா?

நாம் நமது வாழ்க்கையில் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறோம். நாம் குடும்பத்துடனும், நமது பொறுப்புகளுடனும் ஒன்றி இருந்து செயல்படுகிறோம். பணி மாறும்போது அதற்கேற்ப நாமும் மாறிவிட வேண்டும்.

கரோனாவை கட்டுப்படுத்து வதில், தமிழக அரசுடன் இணைந்து நீங்கள் என்ன பணியை மேற் கொள்ளப்போகிறீர்கள்?

தமிழக அரசு கரோனாவை ஏற்கெனவே கட்டுக்குள் வைத் துள்ளது. பாதிப்புகளையும் குறைத்து கட்டுப்படுத்தியுள்ளது. அரசு இந்த சூழலை சிறப்பாக கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக ஆளுநராக மத்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவதில் உள்நோக்கம் இருப்பதாக பல்வேறு கட்சி களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது குறித்த உங்கள் கருத்து என்ன?

இந்த மாநிலத்துடனான எனது உறவு புதியது. அதாவது, எழுதப்படாத கரும்பலகை போன்றது. இந்த உறவை வரும் நாட்களில் அழகானதாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவேன்.

கரோனா தொற்றை கையாள் வது குறித்து?

கரோனா பெருந்தொற்று கையாள்வது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாகும். ஏற்கெனவே கரோனாவில் இருந்து கற்றுக் கொண்ட அனுபவங்களை வைத்தும், அதிகளவில் தடுப்பூசி களை போடுவதன் மூலமும் இதை நாம் சிறப்பாக கையாள முடியும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x