நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் - பணியாளர்கள் ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த பரிசீலனை : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் -  பணியாளர்கள் ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த பரிசீலனை :  அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
Updated on
1 min read

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டத்தூர் கிராமத்தில் பணியில் இருந்த நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், ‘‘தொடர்ந்து பணிகள் வழங்கப்படுகிறதா, பணிகள் செய்ததற் கான நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட் டதா, தற்போது எவ்வளவு ஊதியம் பெற்று வருகிறீர்கள்’’ என கேட் டறிந்தார்.

பின்னர் அவர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.273 ஆக உயர்த்தியுள்ளார். இந்தத் தொகை வந்துள்ளதா என்பதை அவ ரவர் வங்கிக் கணக்கில் சென்று பார்க்க வேண்டும். தற்போது கரோனா ஊரடங் கால் கிராமப்புற மக்கள் வாழ்வா தாரத்தை இழந்திருப்பதை அறிந்து, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்துக் கான ஊதியத்தை விரைவில் ரூ.300 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருகிறார்’’ என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து வாழவந்தான் குப்பம் கிராமத்தில் மகளிர் சுய உத விக் குழு பெண்களால் நடத்தப்படும் சிமென்ட் கற்கள் தயாரிப்பு கூடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் கூறும்பே ாது, ‘‘விடுபட்ட மாவட்டங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறோம். விடுபட்ட மாவட்டங்களில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், மணிக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in