Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் - ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு? : அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத் துக்கு ஊரடங்கை நீட்டிப்பதுடன், தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அதி காரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா ரைவஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 31-ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த இந்த ஊரடங்கு, ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அத்துடன், கூடுதலாக சில தளர்வுகளையும் அறிவித்தார்.

அதன்படி, கரோனா தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு காய்கறி, மளிகை, மீன், இறைச் சிக் கடைகள் திறப்பதற்கு அனுமதி உள்ளிட்ட சில தளர்வுகள் அளிக்கப் பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங் களில் கரோனா பரவல் குறைந்ததை கருத்தில்கொண்டு, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதா வது, மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் திறக்கவும், தனியார் சேவை நிறுவனங்கள், வீடு பரா மரிப்பு சேவைகள், மின் பணியாளர் கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் புரிபவர்கள் காலை 6 முதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப் பட்டது.

மின்பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், பழுதுபார்க்கும் கடை கள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை கடைகள் ஆகியவை காலை 6 முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது.

இந்த கூடுதல் தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தினசரி கரோனா தொற்று பதிவு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஜூன் 14-ம் தேதி காலை 6 மணி யுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கரோனா தொற்று பரவலை மேலும் குறைக் கும் நோக்கில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு ஜூன் 21-ம் தேதி வரை நீட்டிக்கவும், கரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் அதை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வுகள் அளிப்பது குறித்தும் முதல்வரிடம் அதிகாரிகள் பரிந் துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தொற்று குறைந் துள்ள மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டுப்பாடுகளுடன் திறப்பது, துணி, நகைக்கடைகள் திறப்பு, அரசு அலுவலகங்களில் தற்போதுள்ள 30 சதவீதம் பணி யாளர்களை மேலும் அதிகரிப்பது, டாஸ்மாக் கடைகளை நேரக் கட்டுப்பாட்டுடன் திறப்பது, மாவட் டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு இல்லாமல் பயணிப்பது என்பது உள்ளிட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் இன்று வெளி யிடக் கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x