Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பாதிப்பு ஏற்பட்ட 63 நாட்களுக்குப் பிறகு - தினசரி தொற்று ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது : புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 21 முதல் அமலாகிறது

வெளிநாட்டுக்கு உயர் கல்வி பயில செல்லும் மாணவ, மாணவியர் ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

நாட்டில் தினசரி கரோனா தொற்று கடந்த 63 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸின் 2-ம் அலை நாட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கரோனா வால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 63 நாட்களுக்குப் பிறகு நேற்று, தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,498 ஆக பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனாவால் இதுவரை பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 2,89,96,473-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 86,498-ஆக உள்ளது. அதே நேரத் தில் கடந்த 24 மணி நேரத்தில் குண மடைந்தோர் எண்ணிக்கை 1,82,282 ஆகும்.

இதுவரை கரோனாவிலிருந்து நாட்டில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,73,41,462 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,123 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 13,03,702 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 23,61,98,726 பேர் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 21-ம் தேதி முதல் அமலாகவுள்ளன.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனிடையே பல்வேறு மாநில அரசுகளின் விருப்பத்தின்படி கடந்த மே 1-ம் தேதி கரோனா தடுப்பூசி திட்ட வழி காட்டு நெறிகள் திருத்தப்பட்டன. இந்நிலை யில் கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய நிதி திரட்டுவது, தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக மாநில அரசுகள் முறையிட்டன. இதைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி திட்ட வழிகாட்டு நெறி முறைகள் மீண்டும் திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.

இதை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளுக்கு செலுத் தலாம். சுகாதார ஊழியர்கள், முன்கள பணி யாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண் டியவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வரிசையின் அடிப்படையில் மாநில அரசுகள் பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தலாம்.

மாநிலங்களின் மக்கள் தொகை, கரோனா வைரஸ் பாதிப்பு, தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும். கரோனா தடுப்பூசிகளை அதிகம் வீணாக்கினால் ஒதுக்கீடு குறைக் கப்படும்.

மத்திய அரசு தரப்பில் எவ்வளவு தடுப்பூசி அனுப்பப்படும் என்பது மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இதற்கேற்ப மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பு வதை மாநில அரசுகள் திட்டமிட்டுக் கொள்ளலாம். எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது என்பதை மாநில அரசுகள் மக்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.

உள்நாட்டு கரோனா தடுப்பூசி நிறுவனங் கள் 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விற் பனை செய்யலாம்.

தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி தேவை குறித்து அந்தந்த மாநில அரசுகள் கணக்கெடுத்து தகவல் தெரிவிக்க வேண் டும். அதற்கேற்ப தனியார் மருத்துவமனை களுக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும். கிராமங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டும். அப்போதுதான் நகரங்கள், கிராமங்கள் சமநிலையை பேண முடியும்.

தனியார் மருத்துவமனைகளுக்கு விநி யோகம் செய்யப்படும் தடுப்பூசிகளின் விலையை உள்நாட்டு நிறுவனங்கள் ஏற் கெனவே அறிவித்துள்ளன. இந்த விலையில் மாற்றம் இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். தனியார் மருத்துவமனை கள் தடுப்பூசிக்கான விலையை பயனாளிகளி டம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

அதோடு அதிகபட்சமாக ரூ.150 மட் டுமே சேவை கட்டணம் வசூல் செய்ய வேண் டும். இதுதொடர்பாக தனியார் மருத்துவ மனைகளை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். வசதி படைத்தோர் தனியார் மருத் துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள் வதை ஊக்கப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசிக்கு கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேநேரம் நேரடியாக கரோனா தடுப்பூசி மையங்களுக்கு வருவோருக்கும் அந்த மையத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும். திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.- பிடிஐ

தடுப்பூசிக்கு ரூ. 50 ஆயிரம் கோடி

செலவாகும் என அரசு மதிப்பீடு

நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி செலவாகும் என மத்திய நிதி அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “இப்போதைக்கு போதுமான நிதி அளவு மத்திய அரசிடம் உள்ளது. நிதி திரட்ட துணை மானிய நிதி கோரிக்கை இப்போதைக்கு தேவைப்படாது. இப்போதுள்ள நிலையில் இரண்டாவது தவணைக்கு மருந்து வாங்க போதுமான அளவுக்கு நிதி உள்ளது" என தெரிவிக்கின்றன.  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய உள்ள தடுப்பூசி மருந்துகளுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது கணக்கிடப்படவில்லை.

இப்போதைக்கு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துகள் மற்றும் புதிய பயோ-இ தடுப்பூசி மருந்துகளுக்கு ஆகும் செலவு மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்கி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பைஸர் மற்றும் மடோர்னா நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை பாதியில் நின்று போயுள்ளது. இந்நிறுவனங்கள் கடன் உத்திரவாதம் கேட்பதே இதற்கு காரணாகும். மேலும் இந்நிறுவன தடுப்பூசி குறித்த பிரச்சினைகளை அமெரிக்க நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும் என்ற நிபந்தனையும் மிகப் பெரும் சிக்கலாக உள்ளது.

தற்போதைய சூழலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மடோர்னா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து இந்தியாவில் சப்ளை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து இன்னமும் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படவில்லை.

கடந்த மாதம் 30 கோடி பயோ-இ தடுப்பூசி குப்பிகளுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி மருந்து இன்னமும் பரிசோதனை நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி மருந்துக்கு ரூ. 1,500 கோடியை மத்திய சுகாதார அமைச்சகம் முன்பணமாக வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது கரோனா தடுப்பூசி மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x