Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM
தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்பாடு, ஊரடங்கு தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்த நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து வருகிறது. முதல் அலையில் 7 ஆயிரம் வரை சென்ற ஒரு நாள் பாதிப்பு, 2-ம் அலையில் 5 மடங்கு உயர்ந்து 35 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து, கடந்த மே 10-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தளர்வுகள் குறைக்கப்பட்டன.
தொடர்ந்து மே 24-ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 31-ம் தேதி வரை அமல்படுத் தப்பட்டது. முழு ஊரடங்கு காரண மாக குறிப்பிட்ட அளவு பாதிப்பு குறைந்தாலும், கட்டுப்படுத்தப் படாத நிலையில், ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில் ரயில், விமான பயணத்துக்கு செல் லவும், வீடு திரும்பவும் இ-பதிவு என்ற புதிய கட்டுப்பாடும், ஏற்று மதி நிறுவனங்களுக்கு தளர்வும் அளிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலை யில், தினசரி ஆயிரம் என்ற அளவில் தமிழகத்தில் கரோனா பதிவு குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 23 ஆயிரத்தை விட குறைவாகவே தொற்று பதி வாகியுள்ளது. சென்னையில் 2 ஆயிரத்தை விட குறைந்துள்ளது. அதேநேரம் ஒருநாள் உயிரிழப்பு என்பது 463 ஆக உள்ளது.
கோவையில் 2,810 பேரும், திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ் சாவூர், மாவட்டங்களில் ஆயி ரத்துக்கு மேற்பட்டவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்படு பவர்களை விட, குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முழு ஊர டங்கு பலனளித்துள்ளதாக அரசு கருதுகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்து வது, ஊரடங்கு தொடர்பாக நேற்று காலை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி ஜே.கே,திரிபாதி, வருவாய், நிதி, மருத்துவத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங் கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஊரடங்கு நீட் டிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் வரும் 14-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று பரிந் துரைத்துள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை பல மாவட்டங்களில் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வரு கிறது. குறிப்பிட்ட சில மாவட்டங் களில் மட்டும் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியே உள்ளது. இதனால், தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.
இருப்பினும், அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் மூத்த அமைச்சர்களின் கருத்துகள் அடிப்படையில் ஊரடங்கு நீட் டிப்பு தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT