

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக் கள் பதவியேற்பதற்காக தமிழக சட்டப் பேரவை வரும் 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. மறுநாள் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 11-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கம் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தொடங்க உள்ளது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப் பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடை பெறும். பதவியேற்க வரும் உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும். மே 12-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்’ என்று கூறியுள்ளார்.
தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி
பேரவைத் தலைவர் யார்?