Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தமிழகம் முழுவதும் நாளை முதல் அமல் - மளிகை, காய்கறி, தேநீர் கடைபகல் 12 வரை இயங்க அனுமதி : மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவு

தமிழகத்தில் நாளை முதல் மே 20-ம் தேதி காலை வரை மளிகை, பலசரக்கு, காய்கறி, தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள் ளது. இதர கடைகளையும் மூட வேண் டும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தற்போது கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவ தால், கடந்த மே 1-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, தமிழகம் முழு வதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பல்வேறு கட்டுப்பாடுகளு டன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அதேபோல, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. அத்துடன் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங் கள் செயல்படவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் தலைமையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கரோனா ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரத்தில் நோய் தொற்று 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும், ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகள் நிரம்பியுள்ளதும் தெரிந்தது.

எனவே, தவிர்க்க முடியாத காரணங் களின் அடிப்படையில், மே 6-ம் தேதி (நாளை) காலை 4 மணி முதல் மே 20-ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட் டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:

l அனைத்து அரசு, தனியார் அலுவலகங் களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

l பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனி யார், அரசு பேருந்துகள், டாக்ஸி ஆகிய வற்றில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.

l 3 ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு, காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம்.

l மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம்போல செயல்படலாம்.

l அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப் படும். தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும்.

l உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளி களில் சமுதாயம், அரசியல், விளை யாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச் சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக் களுக்கு தடை விதிக்கப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.

l இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் இனி 20 பேருக்குமேல் அனுமதி இல்லை.

l மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்க விதிக்கப்பட்டுள்ள தடை, தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும். ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளபடி, மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி, இறைச்சிக் கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் சனிக்கிழமையும் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x