Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

சென்னையில் இன்று மாலை திமுக புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் - ஸ்டாலின் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் : கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையை தொடங்கினார்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடக்கிறது. இதில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கிறார்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட் டன. திமுக 125, காங்கிரஸ் 18, மதிமுக 4, விசிக 4, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம் யூனிஸ்ட் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, தமி ழக வாழ்வுரிமை கட்சி 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 என்று திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 125 இடங்களில் வென்றுள்ள திமுக, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள 125 எம்எல்ஏக்களின் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுரு கன், நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 4-ம் தேதி (இன்று) மாலை 6 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனை வரும் தவறாமல் கலந்துகொள்ள வேண் டும்’ என்று தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை திமுக கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூட்டம் முடிந்ததும் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார். அப்போது திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

அதன்பின், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கான தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங் களை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கும்.

கொளத்தூர் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்றதும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், ‘‘மே 4-ம் தேதி (இன்று) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும். கரோனா பரவல் அதிகரித்து வரு வதால் பதவியேற்பு விழா, ஆடம்பர விழா வாக இல்லாமல், ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும்’’ என்று கூறியிருந்தார்.

அதன்படி, வரும் 7-ம் தேதி வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில் மிக எளிமை யாக பதவியேற்பு விழா நடைபெறும். முதல்வராக ஸ்டாலினும், அவருடன் 32 அமைச்சர் களும் பதவியேற்பார்கள் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணா, கருணாநிதிக்கு பிறகு திமுக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின், தற்போது அவர்களுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயாரிடம் வாழ்த்து

ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அவர்களை கருணாநிதியின் மகள் செல்வி வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. கருணாநிதியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

வீட்டிலிருந்து வெளியே வந்த ஸ்டாலின் எதிர் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார். அங்கிருந்து அண்ணா அறிவாலயம் புறப்பட்ட ஸ்டாலின், சாலையோரம் நின்று கொண்டிருந்த தனது சிறு வயது நண்பர் ராமச்சந்திரன் என்பவரிடம் நலம் விசாரித்தார். அவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. 2 உதவி ஆணை யர்கள் தலைமையில், சுமார் 100 போலீ ஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வழியாக தேவையின்றி செல்வோரை எச் சரித்து அனுப்புவதுடன், சந்தேகத்துக்கிட மான முறையில் சுற்றித் திரிபவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல, ரோந்து போலீஸாரும் மு.க.ஸ்டாலின் வீட்டை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சுற்றி வருகின்றனர். உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி 20 ஆயிரத்துக்கும்மேல் தொற்று பதிவாகி வருகிறது. தற்போதைய சூழலில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் புதிய அரசு தீவிரம் காட்ட வேண்டியுள்ளது. இந்நிலையில், முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ் ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகன்நாதன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பதவி யேற்பு விழா தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோ சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது கரோனா தடுப்பு மற்றும் மருந்துவ சிகிச்சைகளை மேம்படுத்து வதற்கு தேவையான நடவடிக்கைகளை எந்த தொய்வும் இன்றி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தினார். அதிக பாதிப்பு உள்ளவர் களுக்கு சென்னையில் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படு வதுபோல், தமிழகத்தின் பிற முக்கிய நக ரங்களிலும் வழங்குவதற்கான நட வடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். இது தவிர, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப் பதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவை யான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தடை யின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படியும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x