Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

கொளத்தூர் உட்பட திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் - பணப்பட்டுவாடா நடப்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் : சத்யபிரத சாஹுவிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார்

கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி, திருவண்ணாமலை, காட்பாடி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.படம்: ம.பிரபு

சென்னை

கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல் லிக்கேணி உள்ளிட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவினர் பண பட்டுவாடா செய்து வருவதால் அந்த தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து அதிமுக சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர், சேப்பாக்கம், காட் பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணா மலை ஆகிய தொகுதியில் திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அந்தத் தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

திருமங்கலம் பார்முலா

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் பாபு முருகவேல் ஆகியோர் புகார் மனு அளித்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக ஜனநாயகத்தை அழிப்பதில் சிறந்த கட்சி. ஜனநாயகத்தை விட பண நாயகத்தின் மீது திமுக அதிக நம்பிக்கை வைத்துள்ளது. திருமங்கலம் பார்முலாவை திமுக தற்போது பயன்படுத்தி வருகிறது. இந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவின் பணம் தாராளமாக விளையாடி வருகிறது. இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்கை வெற்றி பெற முயற்சி

கொளத்தூர், சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி, காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய தொகுதியில் திமுக பணப்பட்டுவாடா வில் ஈடுபட்டு வருகிறது. செயற்கை வெற்றி பெற வேண்டும் என்று திமுக போராடி வருகிறது. அதனால் இந்த 5 தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருக்கிறோம்.

திமுக ஆதரவு தொலைக்காட்சி, தொடர்ச்சியாக தேர்தல் விதிமுறை களை மீறி பிரச்சாரம் தொடர்பான செய்தியை ஒளிப்பரப்பி வருகிறது. எனவே அந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக வேட்பாளர் மனு

இதேபோல் கொளத்தூர் தொகுதி யில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி, அத் தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் நேற்று புகார் மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x