Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக - அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு : கரோனா உள்ளவர்களும் வாக்களிக்கலாம்தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு, அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப் பட வாக்காளர் சீட்டுக்கு (பூத் சிலிப்) பதி லாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் அனுமதியுடன், முழு உடல் கவசம் அணிந்து வந்து வாக்களிக் கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமி ழக தேர்தல் துறை முழு வீச்சில் மேற் கொண்டு வருகிறது. 68,324 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, கரோனா பரவலை கருத்தில் கொண்டு, 88,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக தேர்தல் துறை அனுமதி கோரியுள்ளது. இதுதவிர, வாக் காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு, அனைத்து வாக் காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு (பூத் சிலிப்) பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதில் வாக்காளர்கள் புகைப்படம் இருக் காது. வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட் களுக்கு முன்பாகவே அனைத்து வாக் காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் முன் னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலை கண் காணிக்க, செலவின சிறப்பு பார்வையாளர் களாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிகள் மதுமகாஜன், பாலகிருஷ்ணன், பொது பார்வையாளராக அலோக் வர்தன், காவல் துறை சிறப்பு பார்வையாளராக முன் னாள் ஐபிஎஸ் அதிகாரி தர்மேந்திர குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் கள் அனைவரும் விரைவில் தமிழகம் வந்து பணியை தொடங்குவார்கள். இவர்கள் நேரடியாக தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை அளிப்பார்கள்.

மேலும், தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளில் வெளி மாநிலங்களில் பார்வையாளர்களாக பணி யாற்ற உள்ள அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம், கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, கரோனா முன்னேற்பாடுகளு டன் தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத் தப்பட்டது.

அப்போது, தேர்தல் பணியாளர் களுக்கு முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்குதல், தேவையான எண்ணிக்கை, பயன்பாட்டுக்கு பிறகு அவற்றை பாது காப்பாக அப்புறப்படுத்த தேவையான வசதிகள், வரிசையில் 6 அடி இடைவெளி விட்டு வாக்காளர்களை நிறுத்தி வாக்களிக் கச் செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பணியாளர்களுக்கு தேவை யான முகக் கவசம் உள்ளிட்டவை தேர் தல் துறையால் வழங்கப்படும். வாக் காளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். வாக்களிக்கும்போது, முகக் கவசத்தை இறக்கி தங்கள் முக அடையாளத்தை காட்ட வேண்டும்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 11 அடையாள ஆவணங் களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிப்பது குறித்து தொடர்ந்து ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது.

ரூ.11 கோடி பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிப்.26 முதல் மார்ச் 2-ம் தேதி வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.35 கோடி ரொக்கம் உட்பட ரூ.11 கோடியே 98 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாவட்டங்களிலும் தேர்தல் பணியாளர் களுக்கான பயிற்சிகள் தொடங்கிவிட்டன. அவர்கள் முன்களப் பணியாளர்களாக கருதப்பட்டு, சுகாதாரத் துறையுடன் இணைந்து கரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. அவர்களுக்கும் தடுப் பூசி கட்டாயம் கிடையாது. விருப்ப அடிப்படையில் மட்டுமே போடப்படுகிறது.

தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங் கள், விவிபாட் இயந்திரங்கள் அனைத்தும் பரிசோதனை முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தபால் வாக்கு வசதி உள்ளவர்கள், தமிழக அரசின் முதல்நிலை (கிரேடு-ஏ), 2-ம் நிலை (கிரேடு-பி) அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தபால் வாக்கு வசதி பெறு வதற்கு இப்போதிருந்தே விண்ணப் பிக்கலாம். விண்ணப்பத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டால், வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயரில், தபால் வாக்கு வசதி பெற்றுள்ளார் என குறியிடப்படும்.

அதன்பிறகு, தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாக தபால் வாக்கு வசதி பெற்றவர்களிடம் இருந்து வாக்குப்பதிவு செய்த தபால்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் சேகரிக்கப்படும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் கள், தபால் வாக்குப் பதிவு முடிந்த பிறகும்கூட வாக்களிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவர்களின் அனுமதி யுடன், முழு உடல் கவசம் அணிந்து வந்து வாக்களிக்கலாம். அவர்கள், கூடுதலாக ஒதுக்கப்படும் ஒரு மணி நேர அவகாசத்தின்போது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். அப்போது பணியில் இருக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் தேவையான கவச உடைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்க ‘இ-எபிக்’ பயன்படுத்தலாம்

தமிழகத்தில் தற்போது 21 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ‘இ-எபிக்’ என்ற புதிய வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது:

தமிழகத்தில் தற்போதுள்ள 21 லட்சம் முதல் முறை வாக்காளர்களில் 4 லட்சம் பேருக்கு அவர்கள் முகவரிக்கே வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாகவே அனுப்பப்படும். இதுதவிர, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முறை வாக்காளர்கள் ‘voterportal.eci.gov.in’ என்ற இணைப்பில், சென்று பதிவு செய்தால், கைபேசிக்கு வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி, மின்னணு வாக்காளர் அட்டையை கைபேசியில் பெறலாம். அதன்பின் அதை ‘பிரின்ட் அவுட்’ எடுத்து ஆவணமாக பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.

இந்த தொழில்நுட்பம் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைபேசியில் இந்த இ-எபிக் ஐ பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறையை காட்டவும் வரும் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய இருதினங்களும் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படுகின்றன. அதில் முதல் முறை வாக்காளர்கள் சென்று பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x