Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

60 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி சென்னையில் குடியரசு துணைத் தலைவர், ஆளுநருக்கும் தடுப்பூசி போடப்பட்டது

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட் டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் ஆகியோருக்கு தடுப்பூசி போடப் பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலை., அஸ்ட் ராஜெனகா நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற பெய ரில் கரோனா மருந்தை தயாரிக்கிறது. இதேபோல ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவை இணைந்து ‘கோவேக்ஸின்’ மருந்தை தயாரிக் கிறது. இந்த 2 கரோனா தடுப்பு மருந்து களையும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர் கள் உட்பட முன்களப் பணியாளர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 1.43 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இதர நோயால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வார்.

அரசு மருத்துமனைகளில் இலவச மாக தடுப்பூசி போடப்படுகிறது. அதே நேரம் சில தனியார் மருத்துவமனை களிலும் ரூ.250 செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத் துக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தயக்கம்

உள்நாட்டு கண்டுபிடிப்பான கோவேக்ஸின் தடுப்பு மருந்து பரி சோதனையில் உள்ள நிலை யில், அதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனால், இந்த தடுப் பூசியை போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கத்தை போக்கும் வகையில், இந்த மருந்தை பிரதமர் போட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‘கரோனா வுக்கு எதிரான உலகளாவிய போரை வலுப்படுத்தும் வகையில் நமது மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் குறுகிய காலத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ள னர். தகுதி உடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபடுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

கோவேக்ஸின் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதன் மூலம் சுய சார்பு இந்தியா திட்டத்துக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநிலத் தின் பாரம்பரிய உடையான ஸ்கார்ப் அணிந்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி. அதேபோல, தேர்தல் நடக்கவுள்ள கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர்கள் ரோசம்மா அனில் மற்றும் பி.நிவேதா ஆகியோர் பிரதமர் மோடிக்கு தடுப் பூசி போட்டனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

நம் நாட்டில் போடப்படும் 2 கரோனா தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை என தொடக்கம் முதலே நான் கூறி வருகிறேன். கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டபோதிலும் அதற்கு எதிராக தவறான தகவல் பரப்பப்பட்டு வந்தது. அந்த தடுப்பூசியை பிரதமர் போட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கு தெளி வான தகவலை தந்துள்ளார் என கருதுகிறேன். எனவே, அனைவரும் தயக்கம் இல்லாமல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இதன்மூலம் தாங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படும். நானும் நாளை (இன்று) தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில்..

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூ ரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் நேற்று வந்தனர். அவர் களை மருத்துவமனை டீன் ஜெயந்தி வரவேற்றார். இதையடுத்து, இருவருக் கும் கோவேக்ஸின் தடுப்பூசியை செவிலியர் மாலதி செலுத்தினார். 20 நிமிட கண்காணிப்புக்கு பிறகு டீன் ஜெயந்தி மற்றும் செவிலியர் மாலதிக்கு நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x