கேரளா, ஹரியாணா, மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பறவைகள் இறப்பு பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக வாத்து, கோழிகள் விற்பனை முடங்கி உள்ளது. கொச்சியில் உள்ள வாத்துப் பண்ணை ஒன்று விற்பனை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.படம்: எச்.விபு
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக வாத்து, கோழிகள் விற்பனை முடங்கி உள்ளது. கொச்சியில் உள்ள வாத்துப் பண்ணை ஒன்று விற்பனை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.படம்: எச்.விபு
Updated on
2 min read

பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளா, ஹரியாணா, மத்திய பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கில் பறவைகள் இறந்துள்ளன. இதையடுத்து, பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் ஏராளமான கோழி களும் வாத்துகளும் இறந்தன. இதன் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் கேரளாவில் 12 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. பறவைக் காய்ச்சலை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்தொடர்ச்சியாக செவ்வாய்க் கிழமை 24 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டன.

மேலும், கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.அஞ்சனா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோட்டயத்தில் 14-வது வார்டில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் உள்ள பகுதியில் 10,500 பறவைகள் அடுத்த 2 நாட்களில் அழிக்கப்படும். மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் உள்ளதா என்று கண்காணித்து வருகிறோம். இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை’’ என்றார்.

4 லட்சம் கோழிகள் இறப்பு

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா உள்ளிட்ட 4 மாவட்டங் களில் பறவைக் காய்ச்சல் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 246 காகங்கள் இறந்துள்ளன. நிலைமையைக் கண்காணிக்க பாதிப்புள்ள மாவட் டங்களுக்கு சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் மண்டா சூர், இந்தூர், மால்வா ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்ச லுக்கு நூற்றுக்கணக்கில் காகங் கள் இறந்துள்ளன. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை வளர்ப்பு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை, பண்ணைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்து தல் மற்றும் கண்காணிப்பை தீவிரப் படுத்துதல் ஆகிய பணிகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இவற்றை கண்காணிக்க டெல்லியில் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள் ளது. தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கலக்கத்தில் நாமக்கல்

இச்சூழலில் நிலமையை கையாள்வது குறித்து நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந் தது. கூட்டத்துக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மண்டலத்தில் பற வைக் காய்ச்சல் நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் பயப்பட வேண்டாம். முட்டை, கோழிகளை விரும்பி சாப்பிடலாம். அச்சப்படத் தேவையில்லை. ஒரு மாதத்துக்குள் கொள்முதல் செய்யப்பட்ட கோழிப்பண்ணைச் சார்ந்த கோழி, முட்டை, கோழிக் குஞ்சுகள், தீவன மூலப்பொருட் களை அழித்துவிட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்கு மாவட்டத்தில் 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இந்தக் குழுக் களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு மருத்துவ உதவியாளர் உள் ளிட்டோர் இடம்பெறுவர். இவர்கள் தொடர்ந்து பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்வர்.

வனப்பறவைகள் பண்ணை களுக்குள் வராமல் தடுக்க வேண்டும். இறைச்சிக் கடைகள் சுகாதார முறையில் இயங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

‘மக்கள் அச்சப்பட வேண்டாம்’

மத்திய கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். முட்டை மற்றும் இறைச்சியை முழுமையாக சமைத்து சாப்பிடுங்கள். பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in