Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 சேலம் அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச் சாரத்தை முதல்வர் பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று தொடங்கினார். தொடர்ந்து அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 ரொக் கம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

எடப்பாடி பெரியசோரகை கிராமத் தில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலுக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்த முதல்வர் பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, பரிவட்டம் கட்டப்பட்டது. உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் இருந்தனர்.

கோயில் வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பிரச்சார வாகனத் துக்கு நடந்த சிறப்பு பூஜையில் முதல்வர் கலந்து கொண்டார். பின்னர் பெரியசோரகை கிராமத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், அங்கு அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்தார். அங்கிருந்து புறப் பட்ட முதல்வர் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த அதிமுக தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஏறி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இயக்கமாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர், அவரைத் தொடர்ந்து ஜெய லலிதா, அவருக்குப் பின்னரும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. ஏராளமான மக்கள் நலத்திட்டங் களை நிறைவேற்றி, எம்ஜிஆர், ஜெய லலிதா ஆகியோரின் கனவுகளை அதிமுக நிறைவேற்றி வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக ஆட்சி ஒரு மாதம் நீடிக்குமா, 6 மாதம் நீடிக்குமா என பேசினார்கள். பல்வேறு தடைகளைக் கடந்து, இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கடும் வறட்சி, புயல் பாதிப்புகளை சரிசெய் தோம். கரோனா தொற்று தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்தது. கரோனா உயிரிழப்புகளும் குறைந்தன. தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளை பாராட்டிய பிரதமர், இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.

தமிழக அரசின் சிறப்பான செயல் பாடுகளால் நீர் மேலாண்மை, உள்ளாட் சித் துறை, வேளாண் துறை என பல துறைகளிலும் தேசிய விருதுகளை தமிழகம் பெற்று வருகிறது. ஆனால், முதல்வர் பழனிசாமி என்ன திட்டம் கொண்டு வந்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டுகிறார். நீர் மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள். ஆனால், அதிமுக அரசு குடிமராமத்து திட்டத்தை செயல் படுத்தி, நீர் மேலாண்மைக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது.

திமுக ஆட்சியில் மின் தடை தொடர்ந்து கொண்டே இருந்தது. அதிமுக ஆட்சியில், மிகை மின் உற் பத்தி மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள் ளது. 2019-ம் ஆண்டு உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில் புதிய தொழில்களுக்கான 304 தொழிற் சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் போடப்பட்டு, ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடு கிடைத்துள்ளது. ஊரடங்கு காலத்திலும் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்ய முன்வந்தனர்.

வேளாண் துறையில் சிறப்பாக செயல்பட்டு, கடந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் உள்ள கொள்முதல் மையங்களில், 32.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்னர், 23 லட்சம் மெட்ரிக் டன் தான் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

கல்வித் துறையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களை அதிகம் கொண்ட முன்மாதிரி மாநிலமாக தமி ழகம் வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் உயர்கல்வி பயிலும் மாணவர் கள் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்த நிலை தற்போது 49 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஏராள மான குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. திமுக எம்பி கனிமொழி, எடப்பாடி தொகுதியில் முதன்முத லாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யிருக்கிறார். எடப்பாடி தொகுதி அதிமுக-வின் எஃகு கோட்டை. கடந்த 1977-ம் ஆண்டுக்குப் பின்னர் எடப்பாடி தொகுதியில் திமுக ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. எடப்பாடிக்கு முதல்வர் தொகுதி என்ற பெயர் கிடைத் துள்ளது. எந்த தொகுதிக்குப் போனா லும், மக்கள் எடப்பாடியார் என்றுதான் என்னை கூறுகிறார்கள். இந்த புகழ் உங் களால்தான் கிடைத்துள்ளது. நான் முதல்வர் ஆக வேண்டும் என நினைத்த தில்லை. இறைவனாகக் கொடுத்தார்.

அரசுப் பள்ளியில் 6-வது முதல் 11-வது படித்த எனக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் கஷ்டம் தெரியும். அத னால்தான், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சத வீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தேன். இதனால், இந்தாண்டு 313 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்தனர்.

நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது, தொகுதியில் இருந்த வறண்ட ஏரி களுக்கு, காவிரி நீரை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றி, மேட்டூர் உபரிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடைந்து அதை நானே திறந்து வைப்பேன்.

தமிழகம் முழுவதும் கனிமொழி மட்டுமல்ல, திமுக-வின் அனைத்து தலைவர்களும் வந்து பிரச்சாரம் செய்தாலும், அதிமுக-வை வீழ்த்த முடியாது. 2021-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் கனவினை நிறைவேற்று வோம். சட்டபேரவைத் தேர்தலில், அதிமுக வெற்றி பெற நீங்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டோக்கன் விநியோகம்

தொடர்ந்து, இருப்பாளி கிராமத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.6 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கம், ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி மற்றும் உலர் திராட்சை, முந்திரி உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு துணிப்பையுடன் வழங்கப்படும்.

கரோனா காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்பு, டெல்டா உள்ளிட்ட மாவட்டங் களில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ளத் தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 4-ம் தேதி முதல் தமிழக மக்களுக்கு தைப்பொங்கல் பரிசு வழங்கப்படும். இதனை அட்டைதாரர்கள் பெற வசதி யாக, முன்கூட்டியே வீடுகளில் டோக் கன் விநியோகிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x