Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 448-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பண்டிகை நாட்கள் வருவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 448-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 556-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்து 515-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT