Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 372, பெண்கள் 268 என மொத்தம் 640 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 126, கோவையில் 106 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 7,548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,644 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,636 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x