Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள்

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள்.குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எல்லோரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.மிதுனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தடைபட்ட வீடு கட்டும் வேலை மீண்டும் வேகமெடுக்கும். பிள்ளை களால் பெருமை ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.கடகம்: டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.சிம்மம்: குடும்பத்தினருடன் அவ்வப்போது சண்டை, சச்சரவு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு காணப்படும். தர்மசங்கடமான சூழல், அநாவசிய செலவுகள் வந்து செல்லும். எதிலும் நிதானம் தேவை.கன்னி: உங்களின் அணுகுமுறையை மாற்றியமைத்துக் கொள் வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு அமையும்.துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.விருச்சிகம்: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.தனுசு: உங்கள் செயலில் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலரின் சுயரூபம் வெளிப்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.கும்பம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.மீனம்: ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போல் கவலை வந்து செல்லும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x