நடிகர் ரஜினிகாந்த் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து :

நெஞ்சில் ‘ரஜினி டாட்டூ’வுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்.
நெஞ்சில் ‘ரஜினி டாட்டூ’வுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்.
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்தின் 72-வதுபிறந்தநாளை முன்னிட்டு அவருக்குபிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் 72-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி: ரஜினிகாந்த்ஜிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் தனதுபடைப்பாற்றல் மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களை தொடர்ந்துமகிழ்விப்பார்.

முதல்வர் ஸ்டாலின்: உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனியநண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 72-வது வயதில்அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற தனது திரை ஆளுமையால் மகிழ வைக்கவும், உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.

தொலைபேசியிலும் வாழ்த்து

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: 72-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனியநண்பரும், தமிழ் திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறந்துகொண்டிருப்பவரும், ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷண், தாதா சாகேப்பால்கே விருது உட்பட பல்வேறுவிருதுகளை பெற்றவரும், சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான ரஜினிகாந்துக்குபிறந்தநாள் வாழ்த்துகள். அவர்இறையருளால் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து உயர்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: ரஜினிகாந்த்நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்லஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்கமனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய நீதிக் கட்சிதலைவர் ஏ.சி.சண்முகம், சசிகலா,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி,கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி உருவத்தை நெஞ்சில் ‘டாட்டூ’வாக குத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘‘என்நெஞ்சில் சூப்பர் ஸ்டார். 80-களின் பில்லா நீங்கள்தான், 90-களின் பாட்ஷாவும் நீங்கள்தான். 2k அண்ணாத்தநீங்கள்தான். சினிமா பேட்டையோடஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in