அதிமுக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு : டிச.17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு :  டிச.17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
Updated on
1 min read

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் 11-ம் தேதி நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டம், 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் மீதான மாநிலஅரசின் வாட் வரியை குறைக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.40 ஆயிரமும், மறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், அம்மா மினி கிளினிக்கை மூடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிச.9ல் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 11-ம் தேதிக்கு ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

முப்படை தலைமை தளபதி மறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in