Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

6 முறை விபத்தில் சிக்கிய : எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் :

சென்னை

குன்னூரில் விபத்துக்குள்ளான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள், இதற்கு முன்பு 6 முறை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரில் பல்வேறுபாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இருந்தபோதிலும், இந்த ரக ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே சில இடங்களில் விபத்துக்குள்ளானது தெரியவந் துள்ளது.

கடந்த 2010 நவ.19-ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் என்ற இடத்தில், இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்தனர்.

2012 ஆகஸ்ட் 31-ம் தேதி குஜராத்மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படை தளம் அருகே வானில், இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் மோதிவிபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந் தனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் 2013 ஜூன்25-ம் தேதி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டபோது, இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி-5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் என்ற இடத்தில் 2017 அக்.6-ம்தேதி நிகழ்ந்த எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறுகள்

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் மானா என்ற கிராமத்தில், 2018 ஜூலை 14-ம் தேதி நடந்த பயிற்சியின்போது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

2019 பிப்.27-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் என்ற பகுதியின் அருகில் உள்ள கரண்ட் காளன் கிராமத்தில் எம்ஐ-17வி-5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துகள் பெரும்பாலும் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x