

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக இன்று (டிச.8) கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டாமாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்
9-ம் தேதி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.