

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தென் தமிழகம், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று (டிச.7) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
8-ம் தேதி கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.