

சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ஆ.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 10,583 (ஆண்கள் 8,383, பெண்கள் 2,200) உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 10,583 சைக்கிள் தயார் செய்ய ரூ.4 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.