Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத அலைச்சல் ஏற்படக் கூடும்.ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர் பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவஸ்தைகள் ஏற்படும். யாருக்கும், உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப் பீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும்.தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். நல்ல நிறுவனத்தில் புது வேலை கிடைக்கக் கூடும்.மகரம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.கும்பம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடன் தொகையை திருப்பிச் செலுத்த வழி பிறக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x