சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக - 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் : ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக  -  1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்  :  ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

வருவாய்த் துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 10பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வந்த விண்ணப்பங்களில் மாநிலஅளவில் 1,01,474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விதமாக, இந்திராகாந்தி தேசியமுதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 48,077 பயனாளிகள், தேசியமாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் - 1,359 பேர், தேசிய விதவைகள் ஓய்வூதியம் - 4,346 பேர், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம் - 14,739 பேர், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் - 28,209 பேர், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம்- 2,397 பேர், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம் - 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் - 554 பேர், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியம் - 61 பேர் என மொத்தம் 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று 10 பேருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in