‘ஜெய் பீம்' திரைப்பட சர்ச்சை: : இயக்குநர் ஞானவேல் வருத்தம் :

‘ஜெய் பீம்' திரைப்பட சர்ச்சை: : இயக்குநர் ஞானவேல் வருத்தம் :
Updated on
1 min read

‘ஜெய் பீம்' திரைப்படம் தொடர்பாக மனம் புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பட இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘ஜெய் பீம்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இப்படம் தொடர்பாக எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில்மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை.

நவ.1 இரவு அமேசானில் படம் வெளிவந்ததும், காலண்டர் படம் பற்றி வலைதளங்கள் மூலம் அறிந்தோம். அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்துக்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன் பொருட்டு மன வருத்தம்அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும்என் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in