Published : 19 Nov 2021 03:07 AM
Last Updated : 19 Nov 2021 03:07 AM

நவ.20, 21-லும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் :

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள வரும் 20, 21-ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் வசதியாக நவ. 13, 14, 27,28-ம் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனினும், கனமழை யால் சில மாவட்டங்களில் இப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, தகுதியான வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும்வசதியாக வரும் 20, 21-ம் தேதிகளிலும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்’’ என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x