Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

இக்னோ மாணவர் சேர்க்கை அக்.25 வரை நீட்டிப்பு :

சென்னை

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர். கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை பருவ மாணவர் சேர்க்கை அக்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்குப் பொருந்தாது. தொலைதூரக் கல்வி படிப்புகளில்சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழ கத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x