Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

நலிந்த நிலையில் உள்ள - 1,000 கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத் தில், 1,000 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இயல் இசை நாடக மன்றம்

நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், 1,000 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன்மூலம், தமிழக அரசின்கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ் 2018-19 மற்றும் 2019-20ஆகிய 2 ஆண்டுகளுக்கு தலா500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1,000 நலிந்த கலைஞர்கள் பயனடைகின்றனர்.

நிதி உதவி 3 ஆயிரமாக உயர்வு

மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள வயதுமுதிர்ந்த 6,600 செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவர்.

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் வ.கலையரசி,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றதலைவர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x