Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

மேஷம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்

மேஷம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள். எதிலும் தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது.ரிஷபம்: எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து போகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.மிதுனம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி திரும்பும்.கடகம்: உங்களை எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. கவுரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். யோகா ஆன்மிகத்தில் மனம் ஈடுபடும்.சிம்மம்: பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.கன்னி: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வரக் கூடும். எதற்கெடுத்தாலும் மற்றவரை குறைசொல்வதை நிறுத்துங்கள். பிற்பகல் முதல் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும்.துலாம்: ஆடை, ஆபரணங்கள் சேரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். விசேஷங்களால் வீடு களைகட்டும். ஆனால் எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.விருச்சிகம்: நீண்டகாலப் பிரச்சினைகள், சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.தனுசு: பாதியில் நின்ற வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.மகரம்: பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வழக்குகள் சாதகமாகும். புண்ணியத் தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகனுடைய வேலை சம்பந்தமாக முக்கிய பிரமுகரை சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.மீனம்: பேச்சில் அனுபவம் வெளிப்படும். சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x