Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கரோனா பரவலைத் தடுக்க தன்னார்வலர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு பயிற்சி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக தன்னார்வலர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி வெளியிட்ட அறிக்கை:

கரோனா 2-ம் அலையின் பரவலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு பணிகளைமுன்னெடுக்க வேண்டியுள்ளது.

‌அதன்படி, கரோனா பாதிப்புகளைத் தடுக்க, தன்னார்வலர்கள் குழுக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக 6 தலைப்புகளில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ‌அதன்படி பயிற்சி வகுப்பு மே 13 (நாளை) தொடங்கி 15-ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

காலை 11 முதல் 12.30 மணி வரையும், மாலை 3 முதல் 4.30மணி வரையும் பயிற்சி நடைபெறும். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் மற்றும் மிகச்சிறந்த மருத்துவர்கள், துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு இப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.பயிற்சி பெற்றவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் கரோனாபரவலைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ள இயலும்.

பயிற்சியில் முழுமையாகப் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்மற்றும் மின்நூல்கள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/8D2empMu1KPC869AA என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து, பயிற்சிக்கான இணைப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மின்னஞ்சல்/ வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு: என்.மணி - 75982 25040, எஸ்.கிருஷ்ணசாமி - 80125 58638, ஆர்.காத்தவராயன் - 94438 11082, ரிஷி.சரவணன் - 79044 55681 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x