Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
கவுதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர், சேரன் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் 2-ம்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடக்கிறது. ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்குகிறார்.
இப்படம் குறித்து படக்குழு கூறியதாவது: குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்திய படம். பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும், படப்பிடிப்பில் குடும்ப உறவுகள் போலவே அவர்கள் பழகுவதும், திண்டுக்கல் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே படக்குழுவை கொண்டாடுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT