Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

அரசுத் துறையின் வர்த்தகங்களை தனியார் வங்கிகளுக்கு தருவதா? : வங்கி ஊழியர் சங்கம் எதிர்ப்பு

சென்னை

தனியார் வங்கிகளுக்கு அரசு வர்த்தகங்களை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு துறைகளின் பணப் பரிவர்த்தனை, காசோலை உள்ளிட்டவங்கித் தொடர்பான வர்த்தகங்களை தனியார் வங்கிகள் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தனியார் வங்கிகளையும் அரசு வங்கிகளுக்கு இணையாக நடத்த வேண்டும். தனியார் வங்கிகளும் சமமான பங்குதாரர்கள் ஆவர் என மத்திய அரசு அதற்குக் காரணம் தெரிவித்து உள்ளது. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்கு உரியது.

அனைத்து வங்கிகளும் சமமான வங்கிகள் எனில், தனியார்வங்கிகள் ஏன் கிராமப் புறங்களில்தங்களது கிளைகளை திறப்பதுஇல்லை. அத்துடன், விவசாயக் கடன், முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் உள்ளிட்டவற்றை ஏன்வழங்குவது இல்லை. விவசாயக்கடன், கல்விக் கடன், சிறு குறுமற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை பொதுத்துறை வங்கிகள், குறைந்த வட்டியில் வழங்கி வருகின்றன.

அரசு வர்த்தகங்களை பொதுத்துறை வங்கிகள் மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் ஏற்படும் செலவை சமாளிக்கின்றன.

இந்நிலையில், அரசு வர்த்தகங்களை தனியார் வங்கிகளுக்குவழங்கினால், பொதுத்துறை வங்கிகளால் முன்னுரிமை துறை,நலிவடைந்த துறைகளுக்கு கடன் வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x