Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று - புதியதாக 3,672 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதியதாக 3,672 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில்தொற்று தீவிரமாக இருந்தபோது, தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் வரைபாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு, ஊரடங்கு, கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை போன்ற நடவடிக்கைகளால் கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது.

கடந்த ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு 700 முதல் 800 ஆகவும்,மார்ச் 1-ம் தேதி 500-க்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில், தினசரி பாதிப்பு தற்போது 3,500-ஐதாண்டியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று புதியதாக 3,672 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 2,196 பேர், பெண்கள் 1,476 பேர். அதிகபட்சமாக சென்னையில் 1,335 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 3 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

11 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவால் நேற்றுமட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 789 ஆகஉயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 275 பேர்இறந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x