சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு - இந்திய உணவுக் கழகம் சார்பில் கொண்டாட்டம் : 75 வாரங்கள் நடைபெறும்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு -  இந்திய உணவுக் கழகம் சார்பில் கொண்டாட்டம் :  75 வாரங்கள் நடைபெறும்
Updated on
1 min read

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு 75 வார கொண்டாட்டங்களை இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல அலுவலகம் தொடங்கியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை ‘பாரதத்தின் அம்ருத் மகோத்சவம்' என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடுகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள இந்தியஉணவுக் கழகத்தின் தென்மண்டல அலுவலகத்தில், அம்ருத் மகோத்சவத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் 75 வாரங்களுக்கு (2021 மார்ச் 15 முதல் 2022 ஆகஸ்ட் 22 வரை) இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல அலுவலக செயல் இயக்குநர் ஆர்.டி.நசீம், பொது மேலாளர்(பொது) வி.ஏழுமலை ஆகியோர் பேசும்போது, இந்திய உணவுக் கழக நிறுவனத்தின் மதிப்பை பொதுமக்கள் மத்தியில் உயர்த்தும் விதத்தில் அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகம் போன்றவற்றில் பதிவிட்டு இந்த நிகழ்வை பெரும் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று அனைத்து பணியாளர்களையும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இணையக் கருத்தரங்கம், போட்டிகள், பொது ஊடகம்,புகைப்பட கண்காட்சி, முன்னாள்இந்திய உணவுக் கழக அலுவலர்களுடன் நேர்முகம், சுவரொட்டி செய்தல், உள்ளூர்வாசிகள், கிராமங்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் நபர்களை சந்தித்தல்,தெரு நாடகங்கள், விநாடி-வினா,பட்டிமன்றம், குறும்படங்கள், அறிக்கை சமர்ப்பித்தல், வெளியீடுகள், புகைப்படங்கள், தொழில்நுட்ப அறிக்கைகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கிடங்கை பார்வையிடுதல், விளம்பரம், பொம்மலாட்டம், ஆய்வுக் கட்டுரைகள், உள்ளூர் மக்களுக்கு தாவரங்களை வழங்குதல் உள்ளிட்டவை இந்த 75 வார நிகழ்ச்சிக்கான செயல்பாடுகள் ஆகும்.

இத்தகவல்களை இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் ஷைனி வில்சன், செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in