Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி - நடிகர் அஜித் அணி 6 தங்கம், வெள்ளி வென்றது :

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற அஜித் அணியினர்.

சென்னை

தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் அஜித் அணியினர் 6 தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

நடிகர் அஜித் தற்போது ‘வலிமை’ படப்பிடிப்பில் கவனம்செலுத்தி வருகிறார். படப்பிடிப்புக்கு இடையே கார், பைக் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடும் போட்டியில் அதிக ஆர்வம் செலுத்தி வந்த அவர் தற்போது அதற்கான போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் 46-வதுசாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

900 பேர் பங்கேற்பு

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 900 பேர் பங்கேற்றனர். சென்னை ரைஃபிள் கிளப் அணியில் அஜித் இடம்பெற்றிருந்தார்.

தொடர்ந்து 6 நாட்கள் நடந்தஇப்போட்டி நேற்று நிறைவடைந்தது. இதில், அஜித் அணியை சேர்ந்த ஏர் பிஸ்டல் (10 மீ) பிரிவு, சென்டர் ஃபயர் பிஸ்டல்.32/ என்.ஆர் - 25 மீ. பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல்.22/ ஐஎஸ்எஸ்எஃப் - (25 மீ) பிரிவு, ஃப்ரீ பிஸ்டல். 22 (50 மீ) பிரிவு ஆகிய அணியினர் தங்கப் பதக்கம், சென்டர் ஃபயர் பிஸ்டல்.32/ ஐஎஸ்எஸ்எஃப் - 25 மீ.பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல்.22/ என்.ஆர் - (25 மீ) பிரிவு அணியினர் வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதையடுத்து, வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x