Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

விதிமுறைகளை மீறி செயல்பட்ட - 13 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து :

திருத்தங்கலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 13 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் ஒரு பட்டாசு ஆலையில் பிப்.12-ம் தேதி ஏற்பட்டவெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதை யடுத்து, மாவட்டத்தில் உள்ள1,070 பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்வதற்காக வட்டாட்சியர்கள் தலைமையில் 7 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

வெம்பக்கோட்டை அருகேஉள்ள விஜயரெங்காபுரத்தில் பிரபலமான பட்டாசு ஆலைஒன்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இரு அறைகளுக்கு இடையே வெளிப்புறத்தில் பட்டாசு தயாரிக்கப் பட்டதும், பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதேபோல் சிறப்புக் குழுவினரின் ஆய்வில் வி.முத்துராமலிங்கபுரத்தில் உள்ள 2 பட்டாசு ஆலைகள், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, திருத்தங்கல், சாமிநத்தம், பட்டம் புதூர், வச்சக்காரப்பட்டி, சாத்தூர் அருகே மேட்டமலை ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு பட்டாசு ஆலைகள் மற்றும் விருதுநகர் அருகே சின்னவாடி, கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள 2 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 13 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை ஆட்சியர் இரா.கண்ணன் பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல் தொடர்பாக இதுவரை 80-க்கும் மேற்பட்ட பட்டாசுஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x