Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.மிதுனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் காணப்படும்.கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் திறமை பளிச்சிடும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கலில்மாட்டிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். வேலைச்சுமையால் முன்கோபம் தலைதூக்கும்.துலாம்: சத்தமே இல்லாமல் சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும்.விருச்சிகம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.தனுசு: அதிரடியாகச் செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தினருடன் நேரத்தைசெலவிடுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டுமகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.கும்பம்: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.மீனம்: வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதரர் வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x