ஒமைக்ரான் கரோனா வைரஸை தடுக்க -  தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது :  மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்

ஒமைக்ரான் கரோனா வைரஸை தடுக்க - தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது : மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்

Published on

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் விரைவில் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்னும் சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்களில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், டெல்டா வகை கரோனா பரவிய போது தடுப்பூசி செலுத்திக் கொண்டது மற்றும் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி போன்ற காரணங்களால் ஒமைக்ரான் வகை தொற்றின் நோய் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

எனவே, நாட்டு மக்கள் ஒமைக்ரான் கரோனா வைரஸை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்த வழி. மேலும், ஒமைக்ரான் கரோனா வைரஸை, தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் தடுக்காது என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை வரவில்லை. எனவே, தடுப்பூசி மிகச் சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.

தற்போது நடத்தப்படும் பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய முடிகிறது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் இருக்கிறதா என்று உறுதியாக சொல்ல இயலவில்லை.

இவ்வாறு சுகாதாரத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in