

மார்சல் தீவைச் சேர்ந்த சரக்குகப்பலும் ஹாங்காங்கை சேர்ந்த
சரக்கு கப்பலும் நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் கட்ச்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தன. எதிர்பாராதவிதமாக இரு கப்பல்களும் மோதிக் கொண்டன. உடனடியாக கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் இந்திய கடற்படையின் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இரு கப்பல்களிலும் இருந்த43 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பல்கள் மோதிக் கொண்டதால் இரு கப்பல்களில் இருந்தும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் பகுதி மாசடைவதை தடுக்க நிபுணர் கள் குழு தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது.