Published : 23 Sep 2021 03:11 am

Updated : 23 Sep 2021 03:11 am

 

Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் - நடராஜனுக்கு கரோனா தொற்று :

நடராஜன்

துபாய்

கரோனா பாதிப்பால் கடந்த மேமாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் நேற்று துபாயில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின.

இதற்கிடையே போட்டிக்கு முந்தைய தினத்தில் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர்,விஜய் குமார் (அணி மேலாளர்),உள்ளிட்ட 6 பேரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள் அனைவரும் நேற்று காலை மீண்டும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில்அவர்களுக்கு வைரஸ் தொற்றுஇல்லை என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது. டெல்லிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது.

இன்றைய ஆட்டம்மும்பை - கொல்கத்தா

இடம்: அபுதாபி

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

அரண்மனை 3 :

இன்றைய செய்தி

More From this Author

x