

உலகின் அதிவேக சூப்பர் சோனிக் ஜெட் விமானங்களை வாங்க பூம் சூப்பர்சோனிக் நிறுவனத்துடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 15 ஓவர்சர் விமானங்களை வாங்க உள்ளது. இந்த விமானங்கள் மேக் 1.7 வேகத்தில் பறக்கக் கூடியவை. இது தற்போது பயன்பாட்டில் உள்ள அதிவேக விமானங்களை விடவும் இரண்டு மடங்கு வேகமாகப் பறக்கக் கூடியவை. இவை விமான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் என்று பூம் சூப்பர்சோனிக் நிறுவனர் பிளேக் ஸ்கோல் கூறியுள்ளார்.