Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

கேவிபி லாபம் ரூ.359 கோடி :

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் (2020-21) ரூ. 359 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் வங்கியின் லாபம் 52.76 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு வங்கி ஈட்டிய லாபம் ரூ.235 கோடியாகும்.

வங்கியின் வட்டி வருமானம் ரூ. 2,360 கோடி. மொத்த வர்த்தகம் ரூ.1,16,098 கோடி. 7.91 சதவீத வளர்ச்சி எட்டப்பட் டுள்ளது. கடன் அளவு 8.87 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் வழங்கிய கடன் ரூ.52,830 கோடியை எட்டியுள்ளது. நகைக் கடன் வழங்கும் அளவு 39 சதவீதம் அதிகரித்து ரூ.12,852 கோடி கடன் அளவை எட்டியுள்ளது. மொத்த சேமிப்பு மூலமான வருமானம் ரூ. 63,278 கோடியை எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x