Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

2020-21 நிதியாண்டில் ரூ.6 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு :

இந்தியா 2020-21 நிதி ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிகபட்சமான முதலீடு ஆகும்.

2019-20-ம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ.5.4 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் ஒப்பிடுகையில், 10% அதிரித்துள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு எளிதான நாடாக மாற்றகடந்த ஓரிரு ஆண்டுகளாக மத்திய அரசு, பல்வேறு தளர்வுகளைக் கொண்டுவந்தது. அதன் விளைவாகவே அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x