Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு இலவசமாக டெலிவரி செய்ய ஓலா திட்டம் :

நாட்டில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத சூழலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பெறுவதற்கு வசதியாக ``கிவ் இந்தியா'' என்ற தன்னார்வ தொண்டுநிறுவனத்துடன் ஓலா கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு இலவசமாக டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா நிறுவனதலைமை செயல் அதிகாரி பவிஷ்அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அளிப்பதோடு, நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, இனிமேல் தேவைப்படாத சூழலில் அந்தஇயந்திரங்களை அவர்களது வீடுகளிலிருந்து எடுத்து வரும் பணியையும் நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x